Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (07:23 IST)
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டு மாவட்ட மக்களுக்கு மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments