Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 13 மாவட்டங்கள், நாளை 9 மாவட்டங்கள்: கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (13:45 IST)
இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றிய சுழற்சி காரணமாக திடீரென சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  
 
 இந்த நிலையில் இன்று சென்னை உள்பட 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஆளுனரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி திமுக பிரமுகரின் மனைவி.. விளம்பர ஸ்டண்டா?

சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது.. பெரும் பரபரப்பு..!

அதிமுகவில் இருந்து தங்கமணியும் விலகுகிறாரா? எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments