சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்துள்ளதை அடுத்து இதற்கு என்ன காரணம் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் மேனன் பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறிய போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவே சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்துள்ளது என்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தென்கிழக்கு பகுதியில் இருந்து வடபகுதி நோக்கி காற்று சென்றபோது காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக மேலடுக்கு சுழற்சி உருவாகி மெதுவாக நடந்து கொண்டுள்ளது என்றும் இதனால் தான் மழை பெய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். இன்னும் இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளிலும் ஜூன் 22ஆம் தேதி ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுரைத்துள்ளார்.