தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் வெயிலும் தாக்கம் குறைவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்து வருவதால் வெப்பநிலை சீராக உள்ளது என்றும் குறிப்பாக கேரளாவை ஒட்டிய பகுதிகளில் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.