Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (15:45 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பாக 10 அல்லது 15க்கும் மேற்பட்ட நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் இயல்பை விட கூடுதலாக இரண்டு முதல் நான்கு டிகிரி வெப்பம் அதிகரிக்க கூடும் என்றும் அறிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் மதிய வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அதிக அளவு தண்ணீர் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments