Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்றைய மழையைக் கணிக்காதது ஏன்? வானிலை ஆய்வுமையம் பதில்!

Advertiesment
நேற்றைய மழையைக் கணிக்காதது ஏன்? வானிலை ஆய்வுமையம் பதில்!
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:36 IST)
சென்னையில் நேற்று திடீரென 20 செமீ அளவுக்கு மழை பெய்ததால் நகரமே ஸ்தம்பித்துப் போனது.

சென்னையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக 8 மணிநேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று மட்டும் சுமார் 20 செமீ மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பல இடங்களில் வாகனங்கள் மணிக்கணக்காக காத்திருந்து ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில் இந்த பெருமழை பற்றி வானிலை ஆய்வுமையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்துள்ள சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் நா புவியரசன் ‘வடதமிழகம் அருகே நிலவிவந்த வளிமண்டல சுழற்சி தமிழக கடற்கரையை நெருங்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. அதனால் தான் 31 ஆம் தேதி அதிகாலை லேசான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே வானிலையில் மாற்றம் ஏற்பட்டு சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை மேகங்கள் அதிக உயரத்தில் இல்லாமல் சுமார் 3 கிமீ உயரத்திலேயே இருந்தன. இதுபோன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது கடினம். ’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலனுடன் இளம்பெண் உல்லாசம்! – வீடியோ எடுத்து மிரட்டிய சித்தப்பா!