Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 4 வரை இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (13:45 IST)
இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள சில பகுதிகளில் இடியும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று முதல் ஏப்ரல் நான்காம் தேதி வரை அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை என்ற தகவல் பொதுமக்களுக்கு கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒரு மகிழ்ச்சியாக விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையை பொருத்தவரை மாலையில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments