Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

Siva
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (07:24 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் சிறுவர் முதல் பெரியோர் வரை மதிய நேரத்தில் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணமாக, இன்று முதல், அதாவது ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வெயில் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இன்று முதல் சில நாட்களுக்கு வெயில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments