Publish Date: Thu, 30 Dec 2021 (13:14 IST)
Updated Date: Thu, 30 Dec 2021 (13:17 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, தேனாம்பேட்டை, அண்ணாசாலை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.