Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் முதல் மக்களுக்காக மெரினா?? உயர்நீதிமன்றம் ஆணை!!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:51 IST)
நவம்பர் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. 
 
அதிலும் இந்த மாதம் வழங்கப்பட்ட தளர்வுகளில் திரையரங்குகள் மற்றும் கேளிக்கை பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு மட்டும் இன்னும் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
 
மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது என்பது குறித்து அரசு தனது முடிவை தெளிவாக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டது. இதனை அடுத்து அக்டோபர் 31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 
 
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் நவம்பர் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதோடு, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் மெரினா சென்று ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments