சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்.. முழு விவரங்கள்..!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (16:07 IST)
நாளை ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு நாளைய சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தெற்கு ரயில்வே சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் வழக்கமாக பொது விடுமுறை நாட்களில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்குவது வழக்கம். 
 
அந்த வகையில் நாளை திங்கட்கிழமையாக இருந்தாலும் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். 
 
சென்ட்ரல் - அரக்கோணம்,  சென்ட்ரல் - சூளூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments