Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது: கொடிக்கம்பம் விவகாரம் குறித்து அண்ணாமலை..!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (16:00 IST)
கொடிக்கம்பம் விவகாரத்தில் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட பாஜகவிற்கு நல்லது தான் என்றும், பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது என்றும்  கொடிக்கம்பம் விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இரண்டு விதமான வளர்ச்சி இருக்கும். ஒன்று தானாக வளர்ந்து வருவது, இன்னொன்று மற்றொரு கட்சி அந்த கட்சியை வளர்த்து விடுவது. பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அதிக உதவிகளை செய்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை சந்திக்கும் போது தான் ஒரு தொண்டன் தலைவனாக முடியும். 
 
சென்னையில் எத்தனை திமுக கொடி கம்பத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர்?  நவ.1 முதல் 100 நாட்களுக்கு 100 கொடிக்கம்பங்கள் நடப்படும். கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றே கொடிக்கம்பங்கள் நடப்படும்.
 
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால் கொடிக்கம்பங்களை தாமதமாக வைத்து வந்த தொண்டர்கள் இதன் பிறகு துரிதமாக வைப்பார்கள்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments