Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தடுப்பூசி போட்டுக்கிட்டா பிரியாணி மற்றும் பல பரிசுகள்! – பொதுமக்கள் வரவேற்பு!

Advertiesment
தடுப்பூசி போட்டுக்கிட்டா பிரியாணி மற்றும் பல பரிசுகள்! – பொதுமக்கள் வரவேற்பு!
, புதன், 2 ஜூன் 2021 (09:08 IST)
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு பரிசுகள் தருவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு கோவளம் பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக தடுப்பூசிகள் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், தற்போது மக்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று கேம்ப் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் மக்கள் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய சென்னை கோவளம் ஊராட்சி அமைப்புடன் தன்னார்வல அமைப்பு இணைந்து அறிவித்துள்ள சலுகை வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது. மேலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தங்க நாணயம், சலவை எந்திரம் போன்றவை வழங்கபடும் என கூறப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா இரண்டாம் அலை; 594 மருத்துவர்கள் உயிரிழப்பு! – இந்திய மருத்துவ சங்கம்!