தமிழக அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளரை வேலைக்கு எடுக்கும்போது தமிழ் தெரிந்த பணியாளரை எடுப்பதை கட்டாயமாக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் தூய்மை பணிக்கு ஆள் எடுப்பது குறித்த டெண்டர் விடப்பட்ட நிலையில் அதில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதை எடுத்து தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு பள்ளிகளில் தூய்மை பணிக்கு தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிப்பதை கட்டாயமாக பரிசீலனை செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை டெண்டரை தனியாருக்கு வழங்கும்போது தமிழ் தெரிந்தவரை கண்டிப்பாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களை நியமனம் செய்யும் போது தமிழ் தெரியாத வரை நியமனம் செய்தால் பல்வேறு பிரச்சனைகள் எழும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.