கோயில்களின் வருவாய், செலவுகளை மத்திய கணக்கு தணிக்கைக்குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
கோயில் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக்கோரி அறநிலையத்துறை தாக்கல் செய்த மனு மீதானவிசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
இன்றைய விசாரணையின்போது, கோயில்களின் வருவாய், செலவுகளை மத்திய கணக்கு தணிக்கைக்குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என்றும், கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோயில் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக்கோரி அறநிலையத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.