அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கிடையாது: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (13:04 IST)
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு பதிவு செய்த வழக்கு இன்று சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொது குழுவின் நிறைவேற்ற தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓபிஎஸ் வாதம் தற்போது நடைபெற்று வந்த நிலையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
 
ஆனால் இபிஎஸ் தரப்பில் விளக்கம் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. 
 
இந்த நிலையில் இபிஎஸ் உள்ளிட்ட எதிர்ப்மனுதாரர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அவகாசம் கொடுத்து இந்த வழக்கை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் சொல்வதை மாத்தி சொன்னார்!? பெயரை சொல்லாமல் அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி!

இரண்டு வாரங்களுக்கு பிரச்சாரம் ஒத்திவைப்பு! ஆனால்..? - தவெக அறிவிப்பு!

பட்டாசு வெடித்து இளம் தம்பதியினர் பலி.. லேசான காயத்துடன் குழந்தை மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்..!

இருமல் மருந்து குடித்த 6 குழந்தைகள் பரிதாப மரணம்.. விசாரணைக்கு உத்தரவு..!

நாளை 4 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments