Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலிட தலைவர்கள் பிரச்சாரம் செய்யாததால் தோல்வியா? காங்கிரஸ் விளக்கம்..!

Congress
Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (12:01 IST)
திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மேலிட தலைவர்கள் பிரச்சாரம் செய்யாததால் தான் தோல்வி என காங்கிரஸ் தொண்டர்கள் கருதி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். மேலிட தலைவர்கள் பிரச்சாரம் செய்யாததால் தான் மூன்று மாநிலங்களில் தோல்வி ஏற்பட்டதாக கூறுவது தவறு என்றும் திரிபுராவில் வலிமையான கூட்டணி அமைத்தும் ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தும் எங்கள் கனவு நினைவாகவில்லை என்றும் இந்த முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றும் இருப்பினும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய எழுச்சியுடன் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இருப்பினும் பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன என்றும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதும் தமிழ்நாட்டில் எங்கள் கட்சியின் மூத்த வேட்பாளர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் மகாராஷ்டிராவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆர்எஸ்எஸ் கோட்டையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments