சமீபத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்ததை அடுத்து தற்போது தமிழகத்தில் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்களை வைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கோவையை சேர்ந்த நுகர்வோர் மையம் தொடர்ந்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது தமிழகத்தில் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்களை வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சிக்னல் அருகில் இருக்கும் விளம்பரங்களால் வாகன ஓட்டிகளில் கவனம் திசை திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க இந்த தடை விதிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.