மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமின்றி நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளிடம் காட்டும் கெடுபிடிகளுக்கும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
இந்த நிலையில் நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளிடம் ஆபரணங்கள் அகற்றப்படுவது ஏன் என்றும் ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியும் வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறுவது ஏன்? என்று பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் தேசிய தேர்வுக் அமைக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றப்படுவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை அளிக்கப்போகும் பதிலுக்காக மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது