Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் பண்ண போறிங்களா? இதுக்கு பதில் சொல்லுங்க? - பதில் தெரியாத டிடிவி தினகரன்

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (19:41 IST)
டிடிவி தினகரனுக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்ப்புகள் வலுத்து கொண்டே வருகின்றன. கட்சிக்குள்ளே ஏற்படும் பஞ்சாயத்தை சமாளிக்க சமூக புரட்சியாளராய் அவதாரம் எடுத்தவரை உயர்நீதிமன்றன் ஒரே கேள்வி கேட்டு ஓரமாய் உட்காரவைத்துவிட்டது.

தமிழக பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும். மேலும் கட்சியினரும் தொடர்ந்து சமூக பணியில் இருப்பதால் சண்டை போட நேரம் இருக்காது என யோசித்தார் தினகரன். மக்களை நாளை நடைபெற இருக்கும் கிராமசபை கூட்டங்களில் கல்ந்து கொள்ள சொல்லி அறிக்கை வெளியிட்ட அவர், டெல்டா மக்களின் பிரச்சினையான ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட திட்டமிட்டார். இதற்காக அனுமதி கோரிய மனுவை விசாரித்த நீதிபதி “தமிழகத்துக்கு வரும் எல்லா திட்டங்களுக்கு எதிராகவும் இப்படி போராடி கொண்டிருந்தால் எந்த திட்டத்தைதான் நிறைவேற்றுவது?” என்று டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கட்சிக்குள்தான் பிரச்சினை. சரி வெளி பிரச்சினையை பேசி உள் பிரச்சினையை ஊத்தி மூடிவிடலாம் என்றால் அதில் ஒரு பிரச்சினையா என அப்செட்டில் இருக்கிறாராம் டிடிவி தினகரன். சொன்னபடி போராட்டம் நடத்த முடியவில்லையென்றால் அது ஒரு பக்கம் கட்சியின் பிளவை அதிகப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் எப்படியாவது அனுமதி வாங்கிவிட உறுதியாக இருக்கிறாராம் டிடிவி தினகரன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

அடுத்த கட்டுரையில்
Show comments