Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

Mahendran
வெள்ளி, 20 ஜூன் 2025 (12:40 IST)
ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த மார்ச் மாதம், டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டனர். அதன் பிறகு, இது சம்பந்தமாக தயாரிப்பாளராக இருக்கும் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அவர்களின் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் சீல் வைத்தது.
 
இதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், "ஆகாஷ் பாஸ்கரனுக்கும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "ஆதாரங்கள் இல்லாததால், அமலாக்கத்துறையினர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தொடர்பான இடங்களில் சோதனை நடத்த அதிகாரம் இல்லை," என்றும், "அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தும்," உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசி, வேலையின்மை இருந்தால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்" - ப.சிதம்பரம் பேச்சு பரபரப்பு

இந்தியா, சீனா மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா அழுத்தம்.. ஜி7 நாடுகள் ஏற்குமா?

திருச்சியில் விஜய் நடத்தும் முதல் கூட்டம்.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்தம்பிப்பு..!

மாணவர்களின் கண்ணில் Fevikwik ஊற்றிய சக மாணவர்கள்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கொள்கை இல்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments