Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் நிகழ்ச்சியால் 25 நிமிடம் காத்திருந்த நீதிபதி வாகனம்… உயர்நீதிமன்றம் கண்டனம்!

Advertiesment
முதல்வர் நிகழ்ச்சியால் 25 நிமிடம் காத்திருந்த நீதிபதி வாகனம்… உயர்நீதிமன்றம் கண்டனம்!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (17:35 IST)
இன்று காலை நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் அடையாறில் உள்ள சிவாஜி நினைவகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தடுப்புச் சட்டங்களை வைத்து சாலையை மறித்தனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடங்களுக்கு மேல் டிராபிக் நெரிசல் ஏற்பட்டு மக்கள் காக்க வைக்கப்பட்டனர். அப்படி காத்திருந்த வாகனங்களில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் காரும் மாட்டிக்கொண்டுள்ளது.

இதையடுத்து அவர் பொதுத்துறை ஊழியரான தன்னை 25 நிமிடம் பணி செய்ய விடாமல் எதனடிப்படையீர் தடுத்தீர்கள் என்று உள்துறை செயலாளரிடம் கோபத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து நடந்த நிகழ்வுக்கு உள்துறை செயலாளர் மன்னிப்புக் கேட்டார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கும் மரியாதையை நீதிபதிகளுக்கும் வழங்கவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சியில் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என அம்ரீந்தர் நினைக்கிறார்- காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து!