Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீல் ஹீரோவா இருக்காதீங்க... விஜய்க்கு ஐகோர்ட் ரூ. 1 லட்சம் அபராதம்

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (13:44 IST)
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

 
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல கட்டாய பங்களிப்பு என தெரிவித்ததோடு நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments