Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் போதை பார்ட்டி.! பாடகி சுசித்ரா மீது ரீமா கல்லிங்கல் புகார்.!!

Senthil Velan
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (17:47 IST)
இளம்பெண்களுக்கு போதை பார்ட்டி நடத்தியதாக பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியிருந்த நிலையில் கேரள திரைத்துறையில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார். 
 
மலையாள நடிகை ரீமா கல்லிங்கல்  கொச்சியில் அமைந்துள்ள தனது வீட்டில் அடிக்கடி போதை பார்ட்டி நடத்தியதாகவும், அதில் பல்வேறு பெண்களை பங்கேற்க செய்தாகவும் பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவங்களால் தான் நடிகை ரீமாவின் எதிர்காலமே பாதிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.  
 
சுசித்ரா பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, இதற்கு விளக்கமளிக்கும் வகையில், சுசித்ராவின் கருத்து ஆதாரமற்றது என்றும், அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும் ரிமா கல்லிங்கல் தனது சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றசாட்டை சுசித்ரா கூறியிருப்பதாகவும், இது தொடர்பாக மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் ரீமா கல்லிங்கல் குறிப்பிட்டுள்ளார். 


ALSO READ: பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்.! விடியா திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!
 
மேலும் கேரளா திரையுலக தொடர்பாக விசாரணை செய்து வரும் சிறப்பு விசாரணை குழுவினரிடம் ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்