Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழி சாலை: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Chennai HC
, திங்கள், 26 செப்டம்பர் 2022 (17:34 IST)
விக்கிரவாண்டி-தஞ்சாவூர்  இடையிலான நான்கு வழி சாலை திட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
2017 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை பணி தொடங்கப்பட்டது. இந்த பணி தொடங்கி 5 வருடமாகியும் இன்னும் இந்த பணி முடிவடையவில்லை என்றும் இதன் காரணமாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு அக்டோபர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடைவிதிக்க வேண்டும் - திருமா மனு தாக்கல் !