Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டப்பகலில் பிரபல வழக்கறிஞர் வெட்டிக் கொலை

பட்டப்பகலில் பிரபல வழக்கறிஞர் வெட்டிக் கொலை

Advertiesment
பட்டப்பகலில் பிரபல வழக்கறிஞர் வெட்டிக் கொலை

கே.என்.வடிவேல்

, புதன், 22 ஜூன் 2016 (14:42 IST)
சென்னையில், பட்டப்பகலில் பிரபல வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவி. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில்  ஆஜராகி வந்துள்ளார்.
 
இந்த நிலையில், வழக்கறிஞர் ரவி எம்கேபி நகர் பாலம் அருகே திருநங்கைகள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ரவியை சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.
 
இதனால், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி  அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பருப்பு குறித்து பொறுப்பாக பேசிய பாபா ராம் தேவ்!