Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்: சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (20:30 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக சார்பில் சீதாபதி என்பவர் போட்டியிடார். இவருக்கு 61,879 வாக்குகளும் இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் என்பவருக்கு 61,778 வாக்குகளும் கிடைத்தது. இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 101 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ சீதாபதி வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதியின் வெற்றி செல்லும் என்பது உறுதியாகியுள்ளது
 
ஏற்கனவே திமுக எம்எல்ஏக்கள் குறைந்து கொண்டே வரும் நிலையில் தற்போது இந்த தீர்ப்பு திமுக வட்டாரத்தில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments