மனு ஸ்மிருதி குறித்து பேசிய திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசியல் பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தை இழுக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மனு ஸ்மிருதியில் பெண்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக திருமாவளவன் பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது தொடர்பாக திருமாவளவனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மனு ஸ்மிருதியின் மொழிபெயர்ப்புகளில் உள்ளவை உண்மையா என ஆராய்வதற்கு மனு ஸ்மிருதியின் மூலப்பிரதி தற்போது இல்லை. மேலும் மனு ஸ்மிருதி சட்டமாகவும் இல்லை. இதுபோன்ற அரசியல் விவகாரங்களில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதை தொடர்ந்து திருமாவளவன் மீதான வழக்கு திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.