Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை ஏரியில் கண்ணாடி தொங்குபாலம்! – பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடு!

Advertiesment
Bridge
, வியாழன், 15 டிசம்பர் 2022 (13:34 IST)
சென்னை வில்லிவாக்கம் ஏரியில் நடந்து செல்லும் வகையில் நீளமான தொங்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் குடியிருப்பு வாசிகளையும், சுற்றுலா வருபவர்களையும் கவரும் வண்ணம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபமாக நீர்நிலைகள் மீது அமைக்கப்படும் தொங்கும் பாலங்களில் பயணிக்க மக்கள் விருப்பம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதர் மண்டி கிடந்த வில்லிவாக்கம் ஏரி புனரமைக்கப்பட்டு அதன்மேல் கண்ணாடியாலான தொங்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொங்கு பாலத்தில் கண்ணாடி மீதுதான் நடந்து செல்ல வேண்டும். அதிலிருந்து கீழே ஏரியை பார்க்கும்போது தண்ணீரில் மிதப்பது போன்ற த்ரில்லான உணர்வை தரும் என கூறப்படுகிறது.

ரூ.8 கோடி செலவில் இந்த தொங்கு பாலம் அமைக்கப்படுவதுடன் தொங்கு பாலம் சென்று வர படிக்கட்டுகள், லிப்டு உள்ளிட்டவையும், படகு சவாரி, பார்க்கிங், கேண்டீன், கழிவறை வசதிகளும் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த தொங்குபாலம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலை தரிசனத்தில் புதிய மாற்றம்!