Publish Date: Thu, 19 Aug 2021 (10:01 IST)
Updated Date: Thu, 19 Aug 2021 (10:04 IST)
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஓரளவு குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 4449.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 சரிந்து ரூபாய் 35592.00 என விற்பனையாகி வருகிறது
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4813.00 என்ற விலையிலும், ஒரு சவரன் ரூபாய் 38504.00 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூபாய் 67.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67400.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.