Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லனாய் மாறிய விபச்சார பணம்! இளைஞருக்கு தீ வைத்த மும்பை பெண்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (17:40 IST)
சென்னையில் விபச்சார தொழிலில் ஈட்டிய பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் இளைஞர் ஒருவர் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் பகுதியில் தங்கியிருந்து துணி வியாபாரம் செய்து வந்தவர் தீபக். இவர் உடலில் தீ காயங்களோடு தனது வீட்டில் கிடந்ததாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் போலீஸார். ஆரம்பத்தில் தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்று நினைத்த போலீஸார் தீபக் உடலில் உள்ள வெட்டு காயங்களை கண்டு சந்தேகமடைந்துள்ளனர்.

தீபக்கின் செல்போனை ஆராய்ந்த போது அதில் தொடர்ந்து இரண்டு எண்களுக்கு தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த எண்களை ட்ரேஸ் செய்த போலீசார் அவை மீனம்பாக்க விமான நிலையம் அருகே காட்டியதை தொடர்ந்து கிண்டி போலீஸுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளனர். அதை தொடர்ந்து ட்ரேஸ் செய்த போலீஸார் ஹேமந்த், நிலா என்ற இருவரை விமான நிலையம் அருகே வைத்து பிடித்துள்ளனர்.

அவர்களை அழைத்து வந்து விசாரித்தபோது தீபக் மற்றும் ஹேமந்த இணைந்து மும்பையிலிருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நிலா என்ற பெண்ணை அழைத்து வந்து வேலை முடிந்து திரும்ப அனுப்ப இருந்த நிலையில் விபச்சாரத்தில் கிடைத்த பணத்தை பங்கிடுவதில் தீபக், ஹேமந்த் இடையே சண்டை எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹேமந்த், நிலா உதவியுடன் தீபக்கை கத்தியால் தாக்கியும், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தும் விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் தீபக்கை தாக்கிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்