Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 2வது நாளாக கோடை மழை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (15:33 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்றும் இன்றும் மழை பெய்து வருவதையடுத்து சென்னை முழுவதும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தென் தமிழகத்தில் மழை பெய்து வந்தாலும் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் கோடை வெப்பம் அனலாய் கொதித்தது. இந்த நிலையில் நேற்று திடீரென சென்னையில் நல்ல மழை பெய்தது. நேற்றும் இன்றும் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் வானம் இருண்டு காணப்படுவதால் பகலிலேயே சென்னை முழுவதும் இருண்டு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றும் இன்றும் பெய்த மழை காரணமாக சென்னை நகரமே குளிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்னும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியான தகவல் ஆகும். மேலும் அக்னிநட்சத்திரம் முடிவடையும் நிலையில் இருப்பதால் கோடை வெயிலில் இருந்து இன்னும் ஒரு சில நாட்களில் இருந்து பொதுமக்கள் முற்றிலும் விடுதலை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments