Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (19:14 IST)
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 50 பேர் உயர்ந்ததை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் அவர்கள் கூறியதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் சென்னையில் மட்டும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 95 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டதை அடுத்து மொத்தம் 110 பேர் சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து சென்னை மாவட்டம் தமிழகத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல் இடத்தில் உள்ளது. சென்னையை அடுத்து கோவையில் 59 பேருக்கும், திண்டுக்கல்லில் 45 பேருக்கும், நெல்லையில் 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் தமிழகத்திலேயே மிகவும் குறைவாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments