சாலை விபத்துக்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை முதலிடத்தில் இருந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான சாலை விபத்து குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் 53 மெட்ரோ நகரங்களில் 55 ஆயிரத்து 400 விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாகவும்,சென்னையில் மட்டும் 5,000 வாகன விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த சென்னை மூன்றாவது முறையாகவும் முதலிடத்தை பெற்றுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது
ஊரடங்கு காலத்தில் காலியான சாலைகளில் கூட அதிவேகமாக பயணம் செய்து ஒரு சிலர் வாகன விபத்தை ஏற்படுத்தியதாக இதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
2021 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகளில் 15 சதவீதம் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.