சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு! எங்கெங்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 21 மே 2020 (10:30 IST)
சென்னையில் கடந்த 14 நாட்களாக தொற்று கண்டறிப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 
 
தமிழகத்தில் நேற்று 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. 
 
கொரோனாவால் பாதிப்பு அடைந்த 743 பேர்களில் சென்னையில் மட்டும் 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8, 228 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், சென்னையில் கடந்த 14 நாட்களாக தொற்று கண்டறிப்படாத 379 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 
 
14 நாட்களாக புதிய நோய் தொற்று கண்டறியப்படாமல், அதிகப்படியான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது சென்னையில் இதுவே முதல்முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments