Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை Ford-ன் கடைசி கார்: கண்ணிர் மல்க பை பை!!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (11:25 IST)
மறைமலைநகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு தொழிற்சாலை ஜூலை 31 ஆம் தேதியுடன் மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நஷ்டம் காரணமாக சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்பட உள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4,100 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். 
 
இந்நிலையில் மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை தனது கடைசி காரான ECO ஸ்போர்ட்ஸ் காரை தயாரித்து முடித்துள்ளது. இந்த கடைசி காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீர் மல்க தொழிற்சாலைக்கு விடை கொடுத்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வந்த இந்த ஃபோர்டு தொழிற்சாலை ஜூலை 31 ஆம் தேதியுடம் மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments