Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் உற்பத்தியை துவக்கியது சென்னை ஃபோர்டு: திடீர் திருப்பம்

மீண்டும் உற்பத்தியை துவக்கியது சென்னை ஃபோர்டு: திடீர் திருப்பம்
, ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (11:28 IST)
சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென மீண்டும் கார் உற்பத்தியை ஆரம்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென போர்டு நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கார்கள் ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த ஆர்டருக்காக கார் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக சென்னை தொழிற்சாலை மீண்டும் தனது உற்பத்தியை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதைக்கு சென்னை தொழிற்சாலையை மூடும் முடிவு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் அனேகமாக அடுத்த ஆண்டுதான் மூடப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் குஜராத் ஃபோர்டு தொழிற்சாலையை உடனே மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அரசுப்பள்ளியின் சுவர் இடிந்தது: விடுமுறை என்பதால் சேதம் தவிர்ப்பு!