சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாளை 6 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
சென்னை கடற்கரை, எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதை அடுத்து, நாளை கடற்கரை - தாம்பரம்/ செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் நலன் கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2710.2024 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி சென்னை கடற்கரை Yard-ல் நடைபெற உள்ளதால், காலை 04.00 மணி முதல் மாலை 17.00 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/ செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 27.10.2024 அன்று சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை
மா.போ.கழகம் இயக்க உள்ளது.
27.10.2024 அன்று கடற்கரை ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம், எழும்பூர் மற்றும் பூங்கா ரயில் நிலையம் பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.