Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையின் பிரபல தாதா காதுகுத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்துகள் முடக்கம்

Advertiesment
சென்னையின் பிரபல தாதா காதுகுத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்துகள் முடக்கம்
, வியாழன், 18 பிப்ரவரி 2016 (08:45 IST)
சென்னை தாதா காதுகுத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

சென்னை நகரை கலக்கிய பிரபல தாதா காதுகுத்து ரவி. சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியைச் சேர்ந்த இவர் மீது கொலை, ஆட்கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது.
 
சென்னை கே.கே.நகரில் நடந்த கதிரவன் கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாவார். 
 
இவர் முறைகேடாக சேர்த்த சொத்துகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க, அமலாக்க பிரிவுக்கு சென்னை நகர காவல்துறையினர் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ரூ.11.68 கோடி மதிப்புள்ள காதுகுத்து ரவியின் சொத்துகளை முடக்கி மத்திய அரசின் அமலாக்கப்பிரவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
கே.கே.நகரைச் சேர்ந்த ரௌடி கதிரவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதுகுத்து ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil