வங்கியிலிருந்து வருவது போல வரும் போலி குறுஞ்செய்திகளை நம்பி லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என சென்னை சைபர்க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு வசதிகளை அளித்துள்ள நிலையில் மோசடி கும்பலுக்கும் அதை வகையாக இருக்கிறது. சமீப காலங்களில் வங்கியிலிருந்து பேசுவது போல தொடர்பு கொண்டு செய்யும் பண மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் தற்போது வங்கியிலிருந்து வருவது போல செல்போன் எண்களுக்கு கே.ஒய்.சி\ஆதார் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய சொல்லி லிங்க் வருகிறதாம். அதில் சென்று விவரங்களை பூர்த்தி செய்யும் சமயத்தில் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எச்சரித்துள்ள சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வங்கிகள் இப்படியான மெசேஜ்களை அனுப்புவது இல்லை. எனவே இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர்.