15 நாட்களுக்கு மேல் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் பறிமுதல்; சென்னை மாநகராட்சி

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (15:27 IST)
சென்னையில் 15 நாட்களுக்கு மேல் போது இடங்களில் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  
 
சென்னையில் உள்ள சில பகுதிகளில் ஒரே இடத்தில் நாள் கணக்கில் கார்கள் உள்பட வாகனங்கள் நின்று கொண்டிருப்பது குறித்து  மாநகராட்சிக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 
 
இந்த புகார்கள் குறித்து பரிசீலனை செய்த சென்னை மாநகராட்சி தற்போது சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்க கூடாது என்றும் அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
மேலும் கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments