Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்தும் சென்னை மாநகராட்சி!

Advertiesment
corporation
, செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (13:41 IST)
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சோழிங்கநல்லூர் மாதவரம் திருவெற்றியூர் மணலி அம்பத்தூர் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகளில் 800 வகுப்பறைகள் கொண்ட நவீன வசதிகள் செய்து தரப்படும் என்றும் இதன் மூலம் 300 ஆசிரியர்களுக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் மாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என்றும் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் செய்து தரப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
இதன் காரணமாக மாணவ மாணவிகளின் கல்வி தரும் உயரும் என்பது மட்டுமின்றி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இனி வருங்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க வைக்க ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இது இருக்கும் இடம் கூறப்படுகிறது. 
 
சென்னை மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவோடு கூட்டணி அமைக்க போறீங்களா? – கமல் சொன்ன ட்விஸ்ட் பதில்!