விபத்து, ஒலி மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பொது மக்களை சென்னை மாநகராட்சி வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய பட்டாசூகளை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
மேலும் மருத்துவமனைகள் வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது