Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை ஐடி ரெய்டில் சிக்கிய வீடியோக்கள்!? – வெளிவராத உண்மைகள்!

Advertiesment
சென்னை ஐடி ரெய்டில் சிக்கிய வீடியோக்கள்!? – வெளிவராத உண்மைகள்!
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:22 IST)
சென்னை தனியார் நிறுவன கணக்காளர் வீட்டில் நடத்திய ஐடி சோதனையில் அவரது பிரத்யேக ஹார்ட் டிஸ்க் சிக்கியதாகவும், அதில் ஆபாச காட்சிகள் பல இருந்ததாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக அங்கு பல நாட்கள் பணி புரிந்து வந்த கணக்காளர் செந்தில்குமார் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வீட்டில் ரெய்டு நடப்பதால் அலுவலகத்திலேயே தங்கியிருந்த செந்தில் குமார் அங்கேயே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செந்தில் குமார் தனது அலுவலகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்ததாகவும், அவற்றை அவரது ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஹார்ட் டிஸ்க் ஐடி அதிகாரிகளிடம் சிக்கி கொண்டதால் செந்தில் குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதை மறுத்துள்ள செந்தில் குமாரின் உறவினர்கள் ‘செந்தில் குமாருக்கு அவரது அலுவலகத்தில் மிகுந்த மரியாதை இருந்ததாகவும், அவர் கண்ணியத்தோடு பழகுபவர் என்றும்’ தெரிவித்துள்ளனர். மேலும் செந்தில்குமார் இறப்பு சம்பவம் கொலையா? தற்கொலையா? என தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், செந்தில்குமார் பணிபுரிந்த அலுவலகம் ஏதோ உண்மைகளை மறைப்பதற்காக இதுபோன்ற போலியான விஷயங்களை கட்டவிழ்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதை செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைதாவர்களே! நெட்டிசன்கள் அதிர்ச்சி தகவல்