Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (08:13 IST)
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் 800 பேர்களுக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்கள் 500 பேருக்கும் மேல் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் அதிர்ச்சியான செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மன நிலை குறித்தும் அவ்வப்போது சில சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஒரு சிலர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது
 
இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி ஒருவர் திடீரென தப்பி ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீரென அவர் தப்பி ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தப்பி ஓடிய அந்த கொரோனா நோயாளியை தேடும் பணியில் சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக உள்ளனர். சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோயாளி ஒருவர் தப்பி ஓடி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments