Publish Date: Wed, 15 Sep 2021 (08:01 IST)
Updated Date: Wed, 15 Sep 2021 (08:09 IST)
சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் திடீர் ரெய்டு!
சென்னையில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் திடீரென ரெய்டு நடத்த வரித்துறை ரெய்டு நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் புகழ்பெற்ற ஜவுளிக்கடைகள் ஆக போத்தீஸ், சென்னை செல்க்ஸ், ஆரெம்கேவி, நல்லி சில்க்ஸ், ஆனந்தம் உள்ளிட்ட பல கடைகள் உள்ளன.இந்த கடைகளில் தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் என்பதும் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று திடீரென போத்தீஸ், சென்னை சில்க்ஸ், ஆர்எம்கேவி, நல்லி சில்க்ஸ், ஆனந்தம் உள்பட மொத்தம் 103 கடைகளில் வணிகவரித்துறை திடீரென ரெய்டு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வணிக வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் சில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது குறித்து முழு விவரங்களை விரைவில் வெளியிட உள்ளோம் வணிகவரித் துறை தெரிவித்துள்ளது