Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

Advertiesment
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
, செவ்வாய், 5 டிசம்பர் 2023 (07:06 IST)
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு நேற்று நள்ளிரவு முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக 34 செமீக்கும் மேல் மழை பெய்ததால் தண்ணீர் வடியாமல் வெள்ளக்காடாக சென்னை காட்சியளித்து வருகிறது.

மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு 190 கிலோ மீட்டர் தொலைவில் இப்போது மையம் கொண்டுள்ள நிலையில் நள்ளிரவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்வது குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னை செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 8000 கன அடியில் இருந்து 3822 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீரின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெற்கு காஸாவிற்குள் நுழையும் இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்