சாலை துண்டிக்கப்பட்டதால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (09:07 IST)
கோப்பு படம்

நேற்று முழுவதும் சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை முழுவதும் வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. அவற்றை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கோ அல்லது புதுச்சேரியில் இருந்து சென்னைக்கோ பேருந்துகள் இயக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments