Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க அனுமதி..!

tambaram
, வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (10:35 IST)
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க அனுமதி..
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தற்போது பெருங்களத்தூர் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் தாம்பரம் வழியாக பேருந்துகளை இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
வெளியூர்களில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 
 
னால் அதே நேரத்தில் மாலை 5 மணிக்கு மேல் சென்னை வரும் பேருந்துகளை வழக்கம் போல் பெருங்களத்தூர் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த உத்தரவின் காரணமாக பகல் நேரத்தில் சென்னை வரும் பேருந்துகள் மட்டும் தாம்பரம் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.42000 என சரிந்தது தங்கம் விலை.. இன்னும் விலை குறையுமா?