Publish Date: Mon, 23 Jul 2018 (08:29 IST)
Updated Date: Mon, 23 Jul 2018 (08:31 IST)
சென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு கொண்டிருந்த இரண்டு மாடி கட்டிடம் ஒன்றின் சாரம் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஏற்கனவே ஒருவர் மரணம் அடைந்த நிலையில் சற்றுமுன் இன்னொருவர் பலியானார்.
நேற்று முன் தினம் இரவு சென்னை கந்தன்சாவடி பகுதியில் கட்டிடம் ஒன்றில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் கட்டிடத்தின் இரும்பு சாரம் எதிர்பாராமல் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டவrகள் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர், மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலில் இந்த விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை என்று கூறப்பட்டாலும் நேற்று பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு என்பவர் சிகிச்சையின் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு மரணம் அடைந்துள்ளார். ராஜன் சவுத்ரி என்ற 30 வயது கட்டிட தொழிலாளியான இவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.